மொய் என்பது நம்முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை நடைமுறையில்தான் உள்ளது. மொய் என்றால் என்ன?
Posted by : Moipay
2025-03-14 | 21:58 PM
மொய் என்றால் என்ன??
எதற்காக அனைவரும் மொய் செய்கிறார்கள்!!! எந்த விதமான நிகழ்ச்சிகளில் மொய் செய்கிறார்கள். சரி வாருங்கள் மொய் பற்றி தெரிந்துகொள்ளலாம். மொய் செய்யும் பழக்கமானது நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே நடைமுறையில் தான் உள்ளது.
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களை உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என பலரும் பண உதவி செய்து அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காகவே மொய் செய்யும் பழக்கம் உருவானது. இதனை ஒரு நிகழ்ச்சியாக தான் தற்போது வரை நடத்தி வருகின்றனர்.
ஆனால் நாளடைவில் மொய் செய்யும் பழக்கம், முன்னேறி தற்போது எந்த விஷேசமாக இருந்தாலும் கண்டிப்பாக மொய் செய்ய வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். இந்த மொய் வட்டியில்லா கடன் என்று கூட சொல்லலாம்.
ஆம் ஏனெனில் நமது வீட்டில் ஏதேனும் விசேஷங்கள் நடைபெறுகிறது. அதற்கு நமக்கு மொய் ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்கிறோம் எனில் அது நமக்கு வட்டியில்லா கடனாகத்தானே அமைகிறது.
அவ்வாறு வசூல் செய்யப்படும் மொய் பணத்தினை நாம் முழுவதுமாக திரும்ப செலுத்தப்போவது இல்லை. மாதம் மாதம் அதற்கான வட்டியை செலுத்தபோவதும் இல்லை. நமக்கு மொய் செய்தவர்கள் வீட்டில் எப்போது விஷேசம் வருகிறதோ அப்போது அவர்கள் நமக்கு செய்த மொய் தொகையுடன் நம்மால் முடிந்த மொய்-யை சேர்த்து செய்ய போகிறோம். இப்படி வந்ததுதான் மொய்.
ஆடி மாதம் தான் அதிகமாக மொய் விருந்து அழைப்பிதழ் வரும். அதன் காரணம் ஆடி மாதத்தில் தான் திருமணம் போன்ற எவ்வித சுப நிகழ்ச்சிகளும் நடத்த மாட்டார்கள். விவசாயமும் அந்த அளவுக்கு இருக்காது. இச்சூழ்நிலையே சமாளிக்கவே ஆடி மாதத்தில் அதிக மொய் விருந்து வைக்கப்படுகிறது.
முன்பெல்லாம் ஒரு வீட்டில் விஷேசம் என்றால் அவர்கள் வீட்டிற்கு சென்று மொய் பணத்தை கைகளில் கொடுத்துவிட்டு வருவார்கள். அதனை அவர்கள் மறக்காமல் நியாபகம் வைத்து திரும்ப செய்ய வேண்டும்.
அதேபோல் நமது வீட்டிலும் ஏதேனும் விஷேசங்கள் நடைபெற போகிறது என்றால் நாம் மற்றவர்களுக்கு செய்த மொய் தொகையினை திரும்ப பெற வேண்டும். இது நாளடைவில் மறந்து போகவும், திருப்ப செய்ய முடியாமலும் போகவும் அதிக வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க செய்த மொய்யினையும், நமது விசேஷங்களில் வசூலித்த மொய்யினையும் மறக்காமல் இருக்க தனியாக ஒரு நோட்டுகளில் எழுத ஆரம்பித்தனர். தற்போது வரை இப்பழக்கத்தை தான் பின்பற்றி வருகின்றனர்.
ஒரு குடும்பத்தில் சிறிய குழந்தைகள் இருந்தார்கள் என்றால் அவர்களுக்கு காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, திருமண வயதில் இருக்கக்கூடிய பெண்கள், மற்றும் ஆண்களுக்கு திருமண விழா போன்ற விசேஷங்களை நடத்துவது வழக்கம். மேலும் புதுமனை புகுவிழா என பல விதமான விசேஷங்களை நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி இடையில் மொய் விருந்தும் வைப்பதுண்டு. தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் தான் அதிகமான மொய் விருந்து விழா நடைபெறுகிறது.
குறைந்தபட்சம் 5 வருடத்திற்கு ஒரு முறையாவது மொய் விருந்து விழாவினை நடத்துகின்றனர். விழாவில் சைவம், அசைவம் போன்ற உணவு வகைகளை பரிமாறி மொய் வசூல் செய்கின்றனர். மொய் செய்பவர்கள் நமக்கு அவர்கள் செய்த மொய்யோடு நம்மால் முடிந்த பணத்தையும் சேர்த்து செய்கிறனர். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு மடங்கு மொய் செய்தால் அதனை இரு மடங்காக சேர்த்து திருப்பி செய்கிறார்கள். இந்த மொய் வசூலை நாம் கவனமாக செய்ய வேண்டும். மேலும் அதனை நாம் மறக்காமல் திரும்ப செய்ய வேண்டும் அல்லவா..
அதற்காக தான் நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் “வியனி மொய்-பே! என்னது வியனி மெய்பே-வா!! "என்ன டா இது புதுசா இருக்கே" என்று யோசிக்கின்றீர்களா!!! சரி வாருங்கள் வியனி மெய்பே என்றால் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்".