இரு இதயங்கள் இணையும் திருமணவிழாவை பற்றி தெரிந்து கொள்வோமா:-
Posted by : Moipay
2025-03-14 | 19:09 PM
திருமணம் என்பதன் பொருள்:-
திரு என்பது தெய்வத்தன்மை எனவும், மனம் என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு திருமணம் என்பது மேன்மையாக தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகிறது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். மரபு சடங்குகளுடன் சிறப்பு அம்சங்களுடன் நடைபெறும் சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னிலையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமணத்தில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதல் ஆகும். முதலில் ஜாதக பொருத்தம் பார்த்து வீட்டிற்கு பெண் பார்க்க வருவார்கள். பின் நிச்சயதார்த்தம் உறுதிசெய்வர். பிறகு திருமண நாள் ஜோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பார்கள்.
திருமணம் என்றால் என்ன?? திருமணம் செய்வதன் காரணம்
இது ஒரு சமூக, சட்ட உறவு முறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. ஒரு ஆணும், ஒரு பெண்ணும், இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்பெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தமாகும். ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒரு வித பிணைப்பு திருமணம் ஆகும்.
திருமண முறைகள் :-
முன்பெல்லாம் திருமணத்தை பல விதமான முறைகளில் அதாவது பொருள் கொடுத்து, சேவை புரிந்து, திறமையை வெளிக்காட்டி, போர் நிகழ்த்தி, தன் காதல் மிகுதியை காட்டி திருமணத்தை நடத்தி வந்தனர். ஆனால் தற்போது இருக்க கூடிய இக்கால கட்டத்தில் அனைத்துமே மாறி விட்டது.
சாதியும், திருமணமும் :-
இந்தியாவில் சராசரி 89% திருமணம் சொந்த சாதிக்குள்ளையே நடக்கிறது. தமிழகத்தில் 2.59% மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடத்துகின்றனர்.
தமிழர் திருமண நிகழ்வுகள் :-
திருமணம் நடத்துவதற்கு முன்பு முதலில் பொருத்தம் பார்த்தல் வேண்டும். அதன் பிறகே மணநாள் குறித்தல், திருமண அழைப்பிதழ் அல்லது முரசு மூலமாக நகர மக்களுக்கு உணர்த்துதல், மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல், சிறப்பு இறை வழிபாடு செய்தல் மங்கள ஒலி எழச்செய்தல், மணமேடை ஒப்பனை போன்ற ஏற்பாடுகளை செய்வார்கள்.
பொருத்தம் :-
திருமணம் நடத்துவதற்கு முன்பு இருவீட்டாரும் ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். அதன் பிறகே திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள்.
மணநாள் :-
நல்ல நாள், நல்ல நேரம், மங்கள வினைக்குறிய பெரும்பொழுது, சிறுபொழுது பார்த்து திருமணம் நடத்துதல். மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மணநிகழ்வுக்குரிய நல்ல நேரமாக கருதினர்.
மணவினை நிகழும் இடம் :-
பழந்தமிழர்கள் திருமணத்தை பெண் வீட்டில் நடத்துவதை மரபாக கொண்டிருந்தனர். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளிவருதல் கூடாது எனவும் பிறர் மனையில் தங்கவும் கூடாது எனவும் சில பழக்க வழங்கங்களை கடைப்பிடித்து வந்தனர். பரிசம் போடுதலும் பெண் வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவது தமிழர் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது அவரவர் வசதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், மணமகன் இல்லம் ஆகிய இடங்களில் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது.
கன்னிக்கால் ஊன்றல் :-
பெண் வீட்டிலும், மணமகன் வீட்டிலும் தனித்தனியே வடகிழக்கு முறையில் முகூர்த்தக்கால் ஊன்றுவது வழக்கம். அதற்கு கலியாண முள் முருங்கை மரத்தில் ஒரு தடியை வெட்டி அதன் நுனியில் ஐந்து மாவிலைகள் மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளை துணியில் ஒரு செப்பு காசு முடிந்து காட்டுவார்கள். பெரியவர் ஒருவர் அத்தடியை நிலத்தில் ஊன்றியதும் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி, கற்பூரம் கட்ட வேண்டும். அதன் அடியில் நவதானியம், பவளம், நீர், பால், ஊற்றி திருநீறு, சந்தனம், குங்குமம் பூசி கடவுளை வழிபடுவர். முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இரு வீட்டாரும் திருமணம் முடியும் வரை எவ்வித துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது.
மணப்பந்தல் அமைத்தல் :-
மனம் நடைபெறும் வீடுகளில் பந்தல் போடுவது வழக்கம். அப்பந்தலை மணப்பந்தல் என கூறுவார்கள். அப்பந்தலில் 45 கால்கள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாக கருதினர். முதல் பந்தல் காலை நல்ல நாள், நேரம், மங்கள இசை முழங்க நடுவார்கள். தற்போது வரை இப்பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.
பந்தல் :-
பந்தலின் மேலிருந்து தூசி, அழுக்குப்பொருட்கள், பல்லி போன்றவை விழாமல் இருக்கவே மணப்பந்தலின் மேல் துணி காட்டுகின்றனர். திருமணத்திற்கு வாழைமரம் கட்டுவதன் காரணம் வாழை ஒரு முறை தான் குலை போடும் அது போல் எமது வாழ்விலும் திருமணம் ஒருமுறை தான் என்பதை உணர்த்துவதற்க்காகவும், மேலும் வாழையடி வாழையாக வாழைமரம் தழைத்து வளருவது போல, நமது சந்ததியும் பெருக வேண்டும் என்பதற்காக தான் திருமணத்தின் போது இரு வீட்டாரும் வாசலில் வாழைமரம் காட்டுகின்றனர். மணவறையானது கிழக்கு நோக்கி அமைய வேண்டும். ஓமகுண்டம், அரசாணி, விநாயகர், அம்மி, மஞ்சள், போன்றவைகளும் மணவறையில் இடம் பெற்றிருக்கும். விளக்குகள் நிறைகுடங்கள் பாலிகை போன்றவைகளும், மேலும் அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
பாலி வளர்த்தல் :-
பெண் அல்லது மாப்பிளை வீட்டில் பாலில் ஊற வைத்த நவதானியங்களை மூன்று அல்லது ஐந்து சுமங்கலி பெண்கள் சட்டியில் மண் பரப்பி அதில் நீரும், பாலும் தெளிக்க வேண்டும். பின்பு திருமணத்தன்று மணவறைக்கு கொண்டு வருதல் வேண்டும். திருமணம் முடிந்த பிறகு பாழியை நதியில் சேர்த்து விடலாம்.
மங்கள ஒலி :-
திருமணத்தன்று சங்கொலி, பறையொலி, மற்றும் மத்தளம் மூலம் மங்கள இசை நடைபெறும். திருமணத்தில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக அமைகிறது. தாலி கட்டும் தருணத்தில் கெட்டிமேல சத்தம் எழுப்பி தான் தாலி காட்டுவார்கள். இது தற்போது வரை பின்பற்றி வருகின்றனர்.
தாலி கட்டுதல் :-
மணமேடையில் மணமகனின் வலப்பக்கத்தில் கிழக்கு நோக்கி மணப்பெண்ணை அமர செய்வார்கள். பெரியோர்கள் அட்சதை மலர்கள் தூவ, ஒரு பெண் பின்னால் தீபம் பிடிக்க மணமகன் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யத்தை காட்டுவார். மணமகளின் உச்சந்தலையிலும், தாலியிலும் குங்குமத்தில் திலகமிட வேண்டும்.
மாலை மாற்றுதல் :-
தாலி கட்டிய பின் இருவரும் 3 முறை மாலை மாற்றி கொள்ளுதல் வேண்டும். இதன் பொருள் இருமணம் கலந்து ஒரு மணமாகி தன் திருமண வாழ்க்கையை ஆரம்பித்தல் ஆகும்.
கரம் பிடித்தல் :-
திருமணம் முடிந்த பிறகு நீயும் நானும் முதுமை அடைந்து விட்டாலும் கூட ஒருவரை ஒருவர் பிரியாதிருப்போம் என்பதை உணர்த்துவதற்காக தான் மணமகனின் கையை மணமகள் பிடிப்பதன் காரணம் ஆகும். இருவரும் கை கோர்த்த பிறகு அக்னியை சுற்றி வர வேண்டும். இதன் பொருட்டு பஞ்ச பூதங்களின் சாட்சியாக கையை பிடிப்பதாகும்.
அம்மி மிதித்தல் :-
திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் வலது காலை அம்மியன் மேல் வைத்து பெருவிரலுக்கு அடுத்த உள்ள விரலில் மெட்டியை அணிந்துவிடுவார். இதன் பொருட்டு கல் எப்படி அனைத்தையும் தாங்குகிறதோ அதே போல் ஒரு பெண் தன் வாழ்க்கையிலும் வரக்கூடிய இன்ப, துன்பங்களை கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளை கடைபிடித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக தான் பெண்ணின் காலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. மேலும் இதற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது. திருமணமான பெண்ணை பார்க்கும் மற்றொரு ஆண் அவள் திருமணமானவள் என்பதை உணர்த்த மெட்டி அணிவிக்கபடுகிறது.
கணையாழி :-
மஞ்சள் கலந்த நீரில் இருக்க கூடிய மோதிரம் மற்றும் பாலூட்டியை இருவரும் தேடி எடுக்க வேண்டும். இது மூன்று முறை நடைபெறும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து எடுத்தல் வேண்டும். இது நம் வாழ்க்கையிலும் விட்டு கொடுத்து வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக தான் அவ்வாறு நடத்தப்படுகின்றது.
அருந்ததி பார்ப்பது ஏன்?
அருந்ததி என்பவர் சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி ஆவார். இவர் கற்பில் மிக சிறந்தவராக விளங்குபவர். வானில் உள்ள சப்தரிஷி நட்சத்திர மண்டலத்தில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் வசிஷ்டரோடு இவரும் நட்சத்திரமாக இருந்து அவரை என்றும் பிரியாமல் வாழ்கிறார். அதுபோல மணமக்கள் இருவரும் வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ வேண்டும் என்பதை குறிக்கவே இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
பால்பழம் :-
பாலில் வாழைப்பழம் கலந்து மணமகன் முதலில் மணமகளுக்கு 3 முறையும் பின்பு மணமகள் மணமகனுக்கு 3 முறையும் கொடுக்க வேண்டும். இதன் பொருட்டு தம்பதிகளின் வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதே ஆகும்.
இவ்வாறு திருமணத்தில் பலவிதமான சடங்குகள் இருக்கிறது. திருமணம் என்றால் என்ன?? திருமணத்தில் இருக்க கூடிய சடங்குகள் அனைத்தையும் பற்றி முழுவதுமாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணத்தில் மற்றுமொரு முக்கிய நிகழ்வு ஒன்று இருக்கிறது. அது தான் மொய். இந்த மொய்யினை வசூல் செய்வதற்காகவே நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம் வியணி மொய் பே. "வியணி மொய் பே பயன்படுத்துங்கள்". அது தங்களின் அலைச்சலையும், மேலும் தங்களின் பொண்ணான நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.