காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும்:-
Posted by : Moipay
2025-03-14 | 19:11 PM
சிறு வயதிலே குழந்தைகளுக்கு காது குத்துவதன் காரணம்:-
குழந்தை பிறந்த பின், தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம் காது குத்துதல் ஆகும். குழந்தைகளுக்கு காது குத்துவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கத்தினை முன்னோர்கள் அறிமுகப்படுத்தி விட்டு சென்றதால், ஏன் எதற்கு என்றே தெரியாமல் இன்று வரை பின்பற்றி வருகிறோம்.
நமது உடம்பானது வெறும் எலும்பும் தோலும் மட்டுமே நிறைந்தது கிடையாது. நமது உடலை ஒரு சக்தி மண்டலம் இயக்குகிறது. அந்த சக்தி மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள நாம் சில விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. அதில் ஒன்று தான் காது குத்துதல் என்னும் சடங்கு.
குழந்தைகளுக்கு சிறு வயதிலே காது குத்துவதன் மூலம் அவர்களது மூளை வளர்ச்சி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கிறது. இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப்பகுதியாக காது விளங்குவதால் காது குத்தவதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும் என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது.
காது குத்தி தோடு அணிவதன் மூலம், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும். செரிமான மண்டலம் சரிவர இயங்குகிறது. இத்தகைய நலனுக்காக தான் குழந்தைகளுக்கு சிறு வயதிலையே காது குத்துதல் சடங்கு நடத்தப்படுகிறது.
இதுவே காது குத்துவதற்கான அறிவியல் பூர்வமான காரணம் ஆகும். இந்த காதுகுத்து விழாவினை சீரும், சிறப்புமாக கொண்டாடுவது நம்ம தமிழ் மக்கள் தான்.
காதுகுத்தின் போது தலை முடி இறக்க காரணம்?
இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம், இஸ்லாம் சமயம், ரோமன் கேத்தோலிக்ஸ் போன்ற சமயங்கலில் உள்ளவர்கள் தற்போது வரை முடி இறக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். “எதற்காக முடி இறங்குகிறார்கள்”?? முன் ஜென்மத்தில் இருப்பர்வர்களின் தொடர்பை துண்டிப்பதற்காக தான் முடி இறங்குவதாக கூறப்படுகின்றது. தற்போது இருக்க கூடிய இப்பிறவியில் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்வதற்காக தான் குழந்தைகளுக்கு முடி இறங்குகிறார்கள்.
மரம் மற்றும் செடிகளின் இலையை நாம் வெட்டி விட்டாலும் அவ்வெட்டிய இடத்தில் அதன் ஆற்றலை கொடுத்து மீண்டும் துளிர வைக்கிறது. அதுபோல தான் குழந்தைகளுக்கும் முடி இறக்கிய பிறகு வளரக்கூடிய முடிக்கும் நம் உடலில் இருந்து ஆற்றல் செலுத்தப்பட்டு நல்ல உறுதியான, ஆரோக்கியமான முடியை வளர செய்கிறது.
உடம்பில் இருக்கக்கூடிய நரம்புகள், ரத்த நாளங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக செயல்பட தான் முடி இறக்குகின்றன. மேலும் மூளை வளர்ச்சி அதிகமாக இருக்கும். பிறந்த குழந்தைக்கு முதற்பல் முளைக்கும் தருணத்தில் கூட முடி இறங்குகின்றனர். ஏனென்றால் பல் முளைக்கும் போது தான் குழந்தையின் உடலில் அதிக வெப்பம் உருவாகி தலை பாரமாக இருக்கும். இந்த சமயத்தில் முடி இறக்கினால் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் மண்டை தோலில் இருக்கக்கூடிய தொற்றுகள், பாதிப்புகள், பூஞ்சைகள் போன்றவற்றை வராமல் தடுக்கலாம். முடியும் நன்றாக வளரும். கோடைகாலங்களில் முடி இறக்குவது மிகவும் நல்லது. ஏனென்றால் வியர்வையால் வரக்கூடிய பிரச்சனைகளை கூட தடுக்க முடியும். பேன் தொல்லையும் இருக்காது. நீண்ட ஆயுள் கிடைக்க வழி வகுக்கும். குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது அசுத்தங்கள் எல்லாம் குழந்தையில் மண்டை தோலில் தான் அதிகம் இருக்கும். அதனை போக்கவே மொட்டை அடிக்கப்படுகிறது.
ஒன்பது முதல் பதினோரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் ஒன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் முடி இறக்கலாம். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்த பின்பு முடி இறக்குதல் நல்லது. வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்க வேண்டும். தலையில் இருக்கும் நீரை துணி வைத்து அழுத்தாமல் துவட்டி விட வேண்டும்.
முடி இறக்கியதும் சந்தானம், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை பூசலாம். இவை அனைத்தும் நல்ல குளிர்ச்சியை தருகிறது. இவற்றை குறைந்த அளவிலே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் அதிக குளிர்ச்சி குழந்தைகளுக்கு ஆகாது. இதுவே காதுகுத்தின் போது தலை முடி இறக்குவதன் காரணமாகும். இதுவே காது குத்துவதற்கான அறிவியல் பூர்வமான காரணமும் மேலும் காது குத்தின் போது முடி இறக்குவதன் காரணமும் ஆகும்.
இந்த காது குத்து விழாவிலும் மற்றும் முடி இறக்கும் விழாவிலும் மொய் செய்யும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. மொய் செய்வதை எளிமையான முறையில் வசூலிப்பதற்கு நம் “வியணி மொய்-பே” பயன்படுத்துங்கள். அது தங்களின் அலைச்சலையும், மேலும் தங்களின் பொண்ணான நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.