திருவிழாக்கள் இனம், மதம், மொழி கடந்து உலகில் உள்ள எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகின்றன:-
Posted by : Moipay
2025-03-14 | 22:03 PM
திருவிழா:-
திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர். கோயில்களில் நாள்தோறும் வழிபாடுகள் நடந்தாலும் ஆண்டிற்கு ஒரு முறை சிறப்பு வழிபாடு நடைபெறும். அவ்வழிபாடே “திருவிழா” என்று அழைக்கப்படுகிறது. திருவிழா அல்லது உற்சவம் என்பது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடுவது ஆகும். உற்சவம் என்பது பிற மொழிச் சொல்லாகும். திருவிழாக்கள் பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டாலும் மக்களிடையே ஒற்றுமையை உண்டாக்குவதே இதன் முதல் நோக்கமாகும்.
இவ்விழாவினை இயற்கை சார்ந்தவை, இனம் சார்ந்தவை, சமயம் சார்ந்தவை என மூன்று வகைப்படுத்தலாம். இயற்கை சார்ந்த விழா என்பது மக்கள், பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப திருவிழாவை கொண்டாடுவது ஆகும். ஓர் இனத்தின் அடையாளம் மற்றும் வழிபாட்டு நெறிமுறைகளுடன் கொண்டாடப்படும் விழாக்கள் இனம் சார்ந்தவை ஆகும். திருவிழாவின் முக்கிய கோட்பாடு கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும். திருவிழாக்கள் அனைத்து வித மக்களுக்கும் பொதுவானவையாகும்.
இது சமுதாயத்தின் பண்பாட்டையும் மரபையும் வெளிப்படுத்துகிறது. இத்திருவிழாவின் போது வெளியூர்களில் இருந்து உறவினர்கள் விருந்தினர்களாக வருகை தருவார்கள். வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்களும் ஊர்த் திருவிழாவிற்கு சொந்த ஊருக்கு வருகை தந்து சொந்த பந்தம் நட்புகளுடன் சேர்ந்து திருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றனர். திருவிழாக்கள் ஏதேனும் நிகழ்ச்சிகளை நினைவு கூறும் விதமாகவோ, அல்லது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையிலோ அமைகிறது. திருவிழாக்கள் இனம், மதம், மொழி கடந்து உலகில் உள்ள எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாக் கொண்டாட்டத்தின்போது மக்கள் தங்கள் இருப்பிடங்களை தூய்மைப்படுத்துகின்றனர். திருவிழாக்கள் அன்று நீராடி புத்தாடை அணிவது திருவிழாக் கொண்டாட்டத்தின் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி விருந்து உண்டு, உரையாடி பொழுதைக் கழிக்கின்றனர். உரையாடுவதன் மூலம் கவலைகளை மறந்து அனைவருமே மகிழ்ச்சியடைகின்றனர்.
திருவிழாக்காலம்:-
இந்தியாவில் ஆங்கில வருடத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை உள்ள காலம் திருவிழாக்காலம் என்று அழைக்கப்படுகிறது. அந்த காலத்தில் தான் பெரும்பாலான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த கால கட்டத்தில் தான் மக்கள் தங்கள் வீட்டிற்கு உபயோகமான பொருட்கள் புதிய ஆடைகள் ஆகியவற்றை வாங்குகின்றனர். தொழில் நிறுவனங்களும் திருவிழாக்கால தள்ளுபடியை அறிவித்து மக்களின் கொண்டாட்டத்தை உற்சாகப்படுத்துவதோடு அதிக வருவாயும் ஈட்டுகின்றனர்.
திருவிழா நகரம்:-
சைவமும், வைணவமும் இனைந்து கொண்டாடப்படும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா மதுரை சித்திரை திருவிழா. தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மதுரை மாவட்டம் திருவிழா நகரம் என்று அழைக்கப்படுகின்றது. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவிற்கு இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டிற்கு 12 மாதங்களும் திருவிழா நடத்தப்படுகின்றது. இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றவை. சைவ சமய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருமணமும், வைணவ சமய விழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவும் ஒன்றாக நடைபெறுவது வழக்கம். திருமலை நாயக்கர் காலத்தில் இவ்விரு சமய விழாக்களும் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை ஐந்தாம் நாள் இவ்விழா தொடங்கித் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது.
சைவத் திருவிழாக்கள்:-
சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள் சைவர்களாவர். சிவனை வழிபடும் திருவிழாக்கள் சைவத் திருவிழாக்கள் ஆகும்.
ஊர்த்திருவிழா:-
இந்தியாவில் உள்ள சிறுசிறு கிராமங்களில், ஊர்களில், நகரங்களில் திருவிழாக்கள் தனித்தனியே ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாக்களில் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அன்றாட பணிகளினால் ஏற்பட கூடிய களைப்பினை போக்குவதோடு புத்துணர்ச்சியையும் தருவது இதுபோன்ற திருவிழாக்கள் தான். குடும்பத்தினரோடு இத்தகைய திருவிழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு திருவிழாக்களின் முக்கியத்துவம், கலாச்சாரம், பண்பாடு, சமூக நோக்கம் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடிகிறது.
ஆடித் திருவிழா:-
தமிழகத்திலும், அதனைச் சுற்றியிருக்கும் மாநிலங்களில் வீற்றிருக்கும் பெண் தெய்வமான மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அம்மன் திருவிழாவானது, ஊர் முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியாகும். மாரி என்றால் மழை என்று பொருள். கோடைக்காலத்தில் வெப்பத்தின் காரணமாக சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருக்க கூடிய அனைவருக்கும் அம்மை போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இந்நோய்கள் வராமல் தடுப்பதற்காக மழைதர வேண்டி மாரியம்மனுக்கு விழா நடத்தி வழிபடுகின்றனர்.
பல நோய்களுக்கு மருந்தாக உள்ள வேப்பமரமே மாரியம்மனுக்கான “தல விருட்சமாகும்”. இவ்விழா, காப்புக்கட்டுதல் தொடங்கி ஏழு நாள்முதல், பதினைந்து நாள்வரை நடைபெறும். இம்மாதத்தில், பெண்கள் மாரியம்மனுக்கு விரதமிருத்தல், அம்மனுக்கு கூழ் வார்த்தல், பூவோடு எடுத்தல், பூவாரி கொட்டுதல், அலகு குத்துதல், சாட்டை அடித்தல், மொட்டை அடித்தல், மாவிளக்கு எடுத்தல், தீமிதித்தல் போன்ற தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். இவ்விழா, மஞ்சள் நீராட்டுதலுடன் நிறைவடையும். இவ்விழா, கிராமங்கள்தோறும் உள்ள மக்கள் அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பூச்சொரிதல் திருவிழா:-
தமிழ்நாட்டில் மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன் கோவில்களில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்நிகழ்வே, திருவிழா ஆரம்பிப்பதற்கான அறிகுறியாகும்.
பூச்சொரிதல் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடி, மணமுள்ள மலர்களைக் கொண்டு மூலவரான பெண் தெய்வங்களுக்கு அணிவித்து வழிபடுவர்.
தேர்த் திருவிழா:-
திருவிழாக்களில் தெய்வங்களைத் தேரில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வருவது முக்கிய நிகழ்வாகும். ஒவ்வொரு கோயில் திருவிழாவிலும் தேர்த்திருவிழா குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பத்து நாள்கள் நடைபெறும் திருவிழாவின் இறுதி நாளில் மஞ்சள் நீராட்டிற்கு முதல் நாள் தேரோட்டம் நடைபெறும். முதன்மைத் தெய்வத்திற்குப் பெரிய தேரும், பிற தெய்வங்களுக்குச் சிறிய தேரும் இருக்கும்.
தேரில் பெரிய கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றை “வடம்” என்று கூறுவர். இவ்வடத்தைப் பிடித்து இழுத்துச் செல்வதை “வடம் பிடித்தல்” என்பர். கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட முடியாதவர் அதாவது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உதவும் வகையிலும், அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்யவும் இறைவனை வீதி உலாவாக அழைத்து வருவர். இவ்வாறு இறைவன் தன்னை நாடி வந்த அடியவர்களுக்கு அருள் புரிவதோடு, தான் அவர்களை நாடிச் சென்றும் அருள்புரிவார் என்பதைத் தேர்த்திருவிழா உணர்த்துகிறது.
தமிழ் நாட்டிலுள்ள பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருவாரூர் தியாகராசர் கோவில் மற்றும் பல முக்கியமான திருக்கோயில்களில் தேர்த் திருவிழா மிக முக்கியமாக கொண்டாடப்படுகிறது. திருவாரூர் தியாகராசர் கோவில் தேரே, தமிழகத்தின் பெரிய தேராக கருதப்படுகின்றது. இக்கோயிலின் தேர் ஆசியாவிலேயே மிக உயரமான தேர் என்ற பெருமைக்கு உரியது. இத்தேர் 96 அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டது. நான்கு நிலைகளைக் கொண்டதாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் இக்கோயிலின் தேர்த் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுவது வேளாங்கண்ணி ஆகும். வேளாங்கண்ணிமாதா தேர்த்திருவிழா அனைத்து சமய மக்களும் கலந்து கொள்ளும் ஒரு விழாவாகும். தமிழகத்தில் திருவாரூர், பழனி, அவினாசி, திருவில்லிப்புத்தூர், சிதம்பரம், கும்பகோணம், மதுரை, திருவல்லிக்கேணி, திருவரங்கம், திருவண்ணாமலை, திருநெல்வேலி போன்ற இடங்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
தைப் பூசத் திருவிழா:-
தை மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கியமான திருவிழா, தைப் பூசத் திருவிழா ஆகும். உலகிலுள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் இத்திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சித்திரைத் திருவிழா:-
சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் ஆண்டுப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும். இது தமிழகம் மட்டுமின்றி, தமிழர்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாக்களின் பயன்கள்:-
திருவிழாக்கள் கொண்டாடுவதன் மூலம் கவலைகள் பாதியாக குறைக்கின்றன. மகிழ்ச்சியானது இரட்டிப்பு ஆகிறது. உள்ளப் பகிர்தலின் மூலம் மன அழுத்தங்கள் மறைகின்றன. திருவிழாக்கள் ஒற்றுமை, பகிர்ந்துண்ணல், விருந்தோம்பல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. மேலும் இளைய தலைமுறையினருக்கு இவற்றைப் பற்றி கூறுவதன் மூலம் திருவிழாக்களின் நோக்கங்கள், அவற்றின் பயன்கள், கொண்டாடும் முறை ஆகியவை பற்றி தெரிந்து கொள்வதோடு எதிர் காலத்திலும் பாரம்பரியம் மாறாமல் பின்பற்றச் செய்ய முடியும்.
இவ்வாறான திருவிழாக்களின் போது "வியனி மொய்பே" சேவை முக்கிய பங்கு வகுக்கிறது. ஏனென்றால் திருவிழா நடைபெறும் இடம், நேரம் என அனைத்தையுமே "வியனி மொய்பே" மூலம் பதிவேற்றம் செய்துகொள்ளலாம். வெளி ஊர்களில் இருக்க கூடிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்குமே "வியனி மொய்பே" மூலம் தெரிவிக்கலாம்.
அதுமட்டுமின்றி எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் தேர்த்திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதையும் "வியனி மொய்பே" மூலம் அறிந்துக்கொள்ளலாம். தங்களின் கருத்துகளையும் "வியனி மொய்பே"-யின் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறாக தங்களின் அணைத்து நிகழ்ச்சிகளுக்கும் "வியனி மொய்பே" சிறந்த சேவையை வழங்குகிறது.