வலைப்பதிவுகள்

பெண்களுக்காக நடத்தப்படும் சடங்குகளில் முக்கியமான ஒரு சடங்குதான் பூப்புனித நீராட்டு விழா:-
blog
Posted by : Moipay
2025-03-14 | 22:01 PM
பூப்புனித நீராட்டு விழா :-
பூப்புனித நீராட்டு விழா என்பது பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் ஒரு சடங்கு ஆகும். இதனை மஞ்சள் நீராட்டு விழா எனவும் அழைப்பதுண்டு. பெண்கள் தங்களின் பருவ வயது அடைவதை முன்னிட்டு தமிழர்கள் கொண்டாடப்படும் சடங்கு தான் இந்த பூப்புனித நீராட்டு விழா. இது பெண்களை புனிதமாக்கும் விழாவாக கருதப்படுகிறது. ஒரு பெண் பருவம் அடைந்ததை முதலில் அவர்கள் தாய்மாமா வீட்டிற்கு தான் தெரிவிப்பார்கள். தாய்மாமா வீட்டிலிருந்து தான் பெண்ணிற்கு சீர் கொண்டு வருவார்கள். தென்னை ஓலையால் குடிசை கட்டி விடுவதும் தாய்மாமா தான். தாய் மாமா வீட்டிலிருந்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, சீப்பு, கண்ணாடி, பட்டுசேலை, பூ, மாலை, சல்லடை, குத்து விளக்கு என அனைத்துமே வாங்கி வருவார்கள். தாய் மாமா மனைவி, மேலும் சில பெண்கள் சேர்ந்து பூப்படைந்த பெண்ணை மஞ்சள், வேப்பிலை கலந்த நீரை தலையில் சல்லடை வைத்து ஊற்றி விடுவார்கள். தாய்மாமா வீட்டில் வாங்கி வந்த ஆடையை தான் அணிந்துகொள்ள சொல்வார்கள்.
வாசலில் அப்பெண்ணை அமர வைத்து சடங்குகளை தொடங்குவார்கள். சடங்கு முடிந்தவுடன் அப்பெண்ணை பதினாறு நாட்கள் தனியாக இருக்க வைப்பார்கள். தனியாக தட்டு, டம்ளர் என அனைத்தும் கொடுத்து விடுவார்கள். அதை மற்றவர்கள் யாரும் தொட கூடாது. தனியாக இருக்கும் அந்த பதினாறு நாளைக்கும் அந்த தட்டு, டம்ளரை தான் உபயோக படுத்த வேண்டும். யாரையும் தொடவும் கூடாது. அதுமட்டுமில்லாமல் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் நாட்டுக்கோழி முட்டை மற்றும் நல்லெண்ணெய் சாப்பிட அறிவுறுத்துவார்கள். இது பதினாறு நாட்களுக்கும் தொடரும். பதினாறாவது நாள் சடங்கு செய்து அப்பெண்ணை வீட்டிற்குள் அழைப்பார்கள்.
அதன் பிறகு ஒரு சில பேர் பூப்புனித நீராட்டு விழாவை கொண்டாடுவார்கள். ஒரு சில பேர் அப்பெண்ணின் திருமணத்திற்கு முதல் நாள் பூப்புனித நீராட்டு விழா நடத்துவார்கள். பூப்புனித நீராட்டு விழாற்கு ஒரு நல்ல நாள் பார்த்து வீட்டிலோ, மண்டபத்திலோ அல்லது கோவிலிலோ நடத்துவார்கள். இந்த விழா நடத்துவது குறித்து முதலில் தாய்மாமா வீட்டில் கலந்து ஆலோசித்த பிறகு தான் விழாவினை கொண்டாடுகின்றனர்.
காரணம் விழாவினை சிறப்பிக்க, செய்முறைகளை சிறப்பாக செய்ய தாய்மாமா வீட்டில் தயாராக இருக்க வேண்டும். அதற்காக தான் விழா நடத்தவிருப்பதை முதலில் தாய் மாமா வீட்டிற்கு தெரியப்படுத்துகிறார்கள். அவர்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே நல்ல நாள், நேரம், இடம் முடிவு செய்து அழைப்பிதழ் மூலம் அனைவரையும் அழைத்து விழாவினை சிறப்பாக நடத்துகின்றனர். இந்திய நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் தங்களின் மகளுக்கு இவ்விழாவினை நடத்தி கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்த விழா செய்வதன் காரணம் என்ன?? எதற்காக இச்சடங்கு நடத்தப்படுகிறது?? சரி வாருங்கள் பார்க்கலாம். எங்கள் வீட்டில் திருமண வயதில் பெண் இருப்பதை எல்லோரிடமும் மறைமுகமாக தெரியப்படுத்தவே பூப்புனித நீராட்டு விழா கொண்டாடப்படுகிறது. இதுவே பருவ வயதை அடையும் பெண்களுக்காக நடத்தப்படும் சடங்கு ஆகும். திருமணம், மொய்விருந்து விழா மட்டுமல்லாமல் பூப்புனித நீராட்டு விழாக்களிலும் கூட எங்களின் வியனி மொய்பே சேவையை நாங்கள் வழங்குகின்றோம். மொய் செய்பவர்களுக்கு மட்டுமல்லாமல் மொய் வாங்கக்கூடியவர்களுக்கும் இந்த வியணி மொய்பே மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொய் செய்பவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாத வகையில் உருவாக்கப்பட்டதே இந்த வியனி மொய்பே!!!
சமீபத்திய வலைப்பதிவுகள்
blog
Posted by 10-07-2022
ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு செய்வதன் காரணம்! வாங்க பார்க்கலாம்!
வளைகாப்பு நடத்துவதெல்லாம் சரி தான். ஆனால் வளைகாப்பு ஏழாவது, அல்லது
blog
Posted by 10-07-2022
மொய் என்பது நம்முன்னோர்கள் காலத்தில் இருந்து தற்போது வரை நடைமுறையில்தான் உள்ளது. மொய் என்றால் என்ன?
எதற்காக அனைவரும் மொய் செய்கிறார்கள்!!! எந்த விதமான நிகழ்ச்சிகளில் மொய்
blog
Posted by 10-07-2022
காதணி விழா என்பது இந்து தமிழர்களிடையே காணப்படும் ஒரு சடங்காகும்
நம் இந்து தமிழர்கள் வீட்டில் நாடகத்தக்கூடிய சடங்குகளில் ஒன்று தான் காதுகுத்து.