ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு செய்வதன் காரணம்! வாங்க பார்க்கலாம்!
Posted by : Moipay
2025-03-14 | 19:14 PM
வளைகாப்பு :-
தன் பிறப்பு முதல் இறப்பு வரை நடத்த கூடிய பல வித சடங்குகளில் முக்கியான ஒன்று தான் எதிர்கால சந்ததியை கருவில் சுமக்கும் பெண்ணிற்கு நடத்துகின்ற வளைகாப்பு ஆகும். ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துகின்றனர். முதலில் வளைகாப்பு நடத்துவதற்காக தேதி, நல்ல நாள், நேரம் என அனைத்தும் பார்க்க வேண்டும். அதன் பிறகே வளைகாப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்வார்கள்.
சரி வாருங்கள் வளைகாப்பு என்றால் என்ன? என்பதையும் மேலும் அந்த வளைகாப்பு ஏழாவது, அல்லது ஒன்பதாவது மாதத்தில் நடத்துவதற்கான காரணம் என்ன? என்பதையும் தெரிந்து கொள்ளலாம். நம் முன்னோர்கள் கூறும் அணைத்து விதமான விஷயங்களில் அறிவியல் கலந்த காரணம் இருக்கிறது. அதுபோல தான் இந்த வளைகாப்பு சடங்குகளிலும் நாம் முன்னோர்கள் சில விஷயங்களை பின்பன்றி இருக்கின்றனர்.
ஏழாவது மதத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் உடலுறவில் ஈடுபடுதல் கூடாது. காரணம் ஏதேனும் ஒரு பிரச்சனை கர்ப்பிணி பெண்ணிற்கு வர வாய்ப்பிருக்கிறது. அதனால் தான் ஏழாவது மாதத்தில் வளைகாப்பு விழா செய்து பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து கணவன், மனைவி இரண்டு பேரையும் பிரித்து வைக்கிறார்கள்.
அவ்வாறு ஏழாவது மாதத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது பெரியவர்கள் ஆலோசனை மட்டுமின்றி மருத்துவர்களுடைய ஆலோசனையும் கூட. இதுவே ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்பு செய்வதன் காரணம் ஆகும்.
மேலும் வளைகாப்பு அன்று அப்பெண் திருமண புடவையை அணிந்துருப்பார். ஒரு சிலர் வளைகாப்பு நிகழ்ச்சியின் போது பக்கத்தில் தன் கணவரையும் அமர செய்வார்கள். இல்லையென்றால் பெண்ணை மட்டும் அமர வைத்து சடங்குகளை செய்வர்கள். மேலும் வளைகாப்பு நடைபெறும் இடத்தில் குத்துவிளக்கு இரண்டையும் ஏற்றி, பூ, பழம், இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், வளையல் சீர்வரிசை அணைத்தும் தட்டில் வைக்கப்பட்டிருக்கும். மேலும் புளி சாதம், பொங்கல், தயிர் சாதம் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.
தங்களின் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப ஐந்து அல்லது ஒன்பது வகையான உணவு வகைகளை ஏற்பாடு செய்வார்கள். இவை அனைத்தையும் சபையில் வைத்து பின் நல்ல நேரத்தில் வளையல் போட தொடங்குவார்கள். உறவினர்கள் அனைவரும் அப்பெண்ணிற்கு கன்னத்திலும், கைகளிலும் சந்தனம் பூசி,நெற்றியில் குங்குமம் வைத்து மலர் தூவி அப்பெண்ணிற்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆசி வழங்கி வளையல் அணிவிப்பார்கள்.
இதே போல் அனைவருமே ஒருவர் பின் ஒருவராக அப்பெண்ணிற்கு வளையல் போட்டு விடுவார்கள். ஒரு சிலர் வளையல் போடுபவரை (வளையல்காரர்) வைத்து போட்டு விட சொல்வார்கள். வளைகாப்பு முடிந்த பிறகு வயதான சுமங்கலிகள் அப்பெண்ணிற்கு திருஷ்டி எடுப்பர்கள். இதனால் பலவிதமான நன்மைகள் இரண்டு பேருக்குமே கிடைக்கிறது. பிரசவம் பற்றிய பயம், மன அழுத்தம் வராமல் இருக்க, மேலும் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதற்காக வளைகாப்பு நடத்துகின்றனர். வளைகாப்பின் போது அதிக வளையல் போடுவது வழக்கம்.
காரணம், வளையல் சத்தத்தை தொடர்ந்து கேட்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியடைகிறது. இதுவே வளைகாப்பின் போது அதிக வளையல் போடுவதன் காரணம் ஆகும். வளைக்காப்பின் போது பெரும்பாலும் குழந்தை பெற்றவர்களை தான் வளையல் போட அனுமதிப்பார்கள். காரணம் பிரசவத்தின் போது நாங்கள் எந்த அளவுக்கு தைரியமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறோம் என்பதை காண்பிக்க தான் குழந்தை பெற்ற பெண்களை வைத்து வளைகாப்பு நடத்துகின்றனர். இது தெரியாமல் பல பேர் குழந்தை இல்லாதவர்களை எதுவும் செய்ய விடாமல் காயப்படுத்தி விடுகின்றனர். இனிமேலாவது அடுத்தவர்களின் மனதை காயப்படுத்தாமல் நல்ல படியாக விழாவினை சிறப்பிக்கலாம்.
திருமணம், காது குத்து, மற்றும் மொய் விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாமல் தற்போது வளைகாப்பு நிகழ்ச்சிகளிலும் மொய் வசூல் செய்கின்றனர். இருப்பினும் பெரிய அளவில் மொய் வசூல் ஆகா விட்டாலும் வரக்கூடிய மொய்யினை வாங்கிக்கொண்டு அதனை திரும்ப செய்தல் வேண்டும். மொய் என்றாலே கவலை வேண்டாம். மொய் பணத்தை மிகவும் சுலாபமாக செய்யலாம். ஆம் அதற்காக தான் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் வியணி மொய்பே. இந்த மொய் பே பயன்படுத்துவதன் மூலம் மொய் செய்வது மட்டுமின்றி மேலும் உங்கள் மொய் விவரங்களை எளிமையான முறையில் கையாடலாம்.